சந்திர கிரகணம் தொடர்பாக விசேட அறிவிப்பு

moon_eclipse1சந்திர கிரகணம் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை வானிலை அவதான நிலையத்தின் 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, நாளை (புதன்கிழமை) மாலை சந்திர கிரகணம் தோன்றவுள்ளதாகவும் அதனை இலங்கையில் பார்க்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இக் கிரகணமானது அன்றைய தினம் மாலை சந்திரன் உதிப்பதற்கு முன்னர் ஆரம்பமாகின்றது. இதன் உச்ச நேரம் மாலை 06.20 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணங்கள் தோன்றும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பின்பற்றப்பட்ட அமல்களைப் புரிவது ஸூன்னாஹ்வின் அடிப்படையில் நம்மீது கடமையாகவுள்ளது.

எனவே, நாளை மாலை நிகழவுள்ள சந்திரகிரகணத்தையொட்டி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இபாதத்களை ஏற்பாடு செய்துள்ளது. இதன் பிரகாரம் நாளை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் சந்திர கிரகணத்தொழுகையும் குத்பாவும் இடம்பெறவுள்ளது.

எனவே, அன்றைய தினம் ஆர்வமுள்ள சகல பொது மக்களும் பள்ளிவாயலுக்கு சமூகமளித்து, மஹ்ரிப் தொழுகையுடன் ஆரம்பாகவுள்ள கிரகணத் தொழுகையில் கலந்து கொண்டு, றஸூல் (ஸல்) அவர்களின் இம் முன்மாதிரியான அமல்களைப் புரிந்து, அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தருமாறு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

Previous articleகொத்து ரொட்டி விசமானது! மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்!
Next articleஇரகசிய முகாம்கள் : முறைப்பாடு கிடைத்திருந்தால் ஆராய்ந்திருப்போம்