அதுவா.. இதுவா..! இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் வினோதம்! (வீடியோ இணைப்பு)

Captureமகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் மைதானத்தில் 2 பந்துகள் இருந்ததால் வீராங்கனைகள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை நடந்த மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டக்வொர்ட் லூயிஸ் முறைப்படி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடும் போது பாகிஸ்தான் வீராங்கனை நிதா 16வது ஓவரை வீசினார்.

அப்போது இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி அடித்த ஷாட்டால் பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. அதை பாகிஸ்தான் வீராங்கனை தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து எல்லைக்கோட்டை தொட்டது.

அந்த பந்தை மற்றொரு வீராங்கனை எடுத்து விசினார். அப்போது அங்கு மற்றொரு பந்து கண்டு பிடிக்கப்பட்டது. அது எப்படி வந்தது என்று தெரியவில்லை.

இதனால் பாகிஸ்தான் வீராங்கனைகள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அந்த பாகிஸ்தான் வீராங்கனை சரியான பந்தையே எடுத்து வீசினர்.

வீடியோ இதோ,

Previous articleபிரபாகரனை வீழ்த்த மகிந்த செய்த நரபலி வேள்விகள்! ஜோதிடர் அதிர்ச்சி தகவல்
Next articleநாடகத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்