கர்ப்பிணி ரீச்சர் பரிதவிப்பு குடும்பம் நடத்திய மாணவர் ஓட்டம்

leavesகுடும்பம் நடத்திய மாணவர் குடும்பத்தினரோடு சேர்ந்த நிலையில் கர்ப்பமான ஆசிரியை கோதைலட்சுமி உறவுகளும் கைவிட்ட நிலையில் எதிர்காலம் கேள்விக்குறியாகி பரிதவிக்கிறார்.நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சந்திரகுமாரின் இரண்டாவது மகன் சிவசுந்தரபாண்டியன்(16). கடந்த ஆண்டு தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பள்ளி ஆசிரியையான செங்கோட்டை காலாங்கரையை சேர்ந்த கேசரி மகள் கோதைலட்சுமி(25)யிடம் சிவசுந்தரபாண்டியன் டியூஷன் படித்தபோது இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறிச்சென்ற சிவசுந்தரபாண்டியன் வீடு திரும்பவில்லை. அதே நாளில் கோதைலட்சுமியும் மாயமானார்.

ஆசிரியை தனது மகனை கடத்திச் சென்றுவிட்டதாக மாணவரின் தாய் மாரியம்மாள் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வலையில் காதலர்கள் சிக்காத நிலையில், அக்டோபர் மாதம் தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து திருப்பூர் புலவன்பட்டியிலிருந்து இருவரையும் போலீசார் மீட்டு வந்தனர்.

விசாரணையில் கோதைலட்சுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, கர்ப்பமாக இருப்பதால் ஆசிரியை மாணவருடன் சேர்ந்து வாழ துடித்தார். மாணவரின் நிலையை நீதிபதி கேட்டதற்கு தாயுடன் செல்வதாக கூறவே, அவர்களோடு அனுப்பப்பட்டார். டீச்சர் கோதைலட்சுமி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை விட வேடிக்கை அந்த மாணவர், டீச்சருடன் இருந்த காலம் என் வாழ்வில் மோசமான காலம் என குறிப்பிட்டார்.சட்டப்படி குற்றவாளியாக கருதப்பட்ட ஆசிரியை அந்த கணமே பாதிக்கப்பட்டவரானார்.

போலீஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் மாணவரின் தாயும் உறவினர்களும் வந்திருந்தனர். ஆனால்,ஆசிரியை வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

அவர் கிட்டத்தட்ட வீட்டை விட்டு விலக்கி வைக்கப்பட்டவர் ஆனார்.பாண்டிச்சேரியிலிருந்தபோது அங்குள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்ததாக தெரிவித்தனர். ஆனால், மைனர் திருமணம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமில்லை.

இதற்கிடையே சட்ட நடவடிக்கை ஆசிரியையான பெண்ணுக்கு எதிராக இருப்பதாக பலரும் கருதுகின்றனர். மாணவரின் பெற்றோர் அந்த ஆசிரியையின் பெற்றோர் நிலையிலிருந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். ஆசிரியையின் முந்தைய செயல்கள் தவறு என்றாலும், பிந்தைய வாழ்க்கையின் பாதிப்பு அதிகமாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து மனநல மருத்துவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:ஒரு ஆணுக்கு பிசிக்கல் மெச்சூரிட்டி என்னும் உடல் தகுதி 15 வயதிலேயே வந்துவிடும். ஆனால் 17 வயது வரை அவர்கள் தங்கள் முடிவுகளை அடிக்கடி மாற்றலாம்.

சமூகத்தை எடைபோடும் சோசியல் ஜட்ஜ்மென்ட் கெப்பாசிட்டியும், தன்னைத்தானே எடைபோடும் பெர்சனல் ஜட்ஜ்மென்ட் கெப்பாசிட்டியும் 18 வயதுக்கு மேல் வரும்.

அந்த தகுதியை பெற்ற ஆசிரியை கோதைலட்சுமி, தன்னிடம் படிக்கும் மாணவர் நெருங்கிப் பழகியிருந்தாலும் அதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனாலும், தற்போதைய அவரது நிலையில் மனிதாபிமானமாகவும், மனோரீதியாகவும் ஆதரவு தேவை.

அவருக்கு சமூக, குடும்ப ரீதியான புறக்கணிப்பு நேராமல் அதிகாரிகள் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் அஜிதா கூறுகையில், ‘சிறார்களை பாலியல் வன்முறையில் இருந்து காக்கும் பாக்சோ சட்டப்படி மாணவர் புகார் செய்திருந்தால் ஆசிரியை குற்றவாளி.

செய்யாதபோது அதைப்பற்றி பேச வேண்டியதில்லை. அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் குழந்தை திருமண தடைச்சட்டப்படி அது செல்லாது. அன்பை வெளிப்படுத்துவதில் நடந்துவிடும் இதுபோன்ற சிக்கல்களை ஆசிரியை தவிர்த்திருக்க வேண்டும். இருவரிடமும் குற்றத்தை நிரூபிக்க முடியாத ஒப்புமை உள்ளதால் தண்டனையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால், உடல் ரீதியான வளர்ச்சியை வயதாக கருதி பரிசீலிக்க சட்ட ரீதியாக பரிந்துரைக்க முடியாது. அந்த பார்வையே தவறானது’ என்றார்.இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் 2வது மனைவிக்கு அவரை விட 10 வயது அதிகம். காந்தி, காரல் மார்க்ஸ், டெண்டுல்கர் எல்லோரும் தம்மை விட வயது மூத்த பெண்ணையே மணந்துள்ளனர். எனவே, வயது வாழ்க்கைக்கொரு பிரச்னை அல்ல என சிலர் கூறுகின்றனர்.

Previous articleநாடகத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Next articleமஹிந்தவைப் பற்றி கமலேஷ் சர்மா