மஹிந்தவைப் பற்றி கமலேஷ் சர்மா

Mahinda-Kamaleshதனக்கும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்குமிடைலான உறவு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா கண்டு கொள்ளவில்லை என மனித உரிமை அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு தரப்புக்களும் குற்றம் சுமத்தியிருந்தன.

இவ்வாறன ஒரு நிலையிலேயே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

அத்துடன், பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பு நாடுகளுடனும் இணைந்து அதன் கொள்கைகள் கோட்பாடுகளை மேம்படுத்துவதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா, ஐந்து தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Previous articleகர்ப்பிணி ரீச்சர் பரிதவிப்பு குடும்பம் நடத்திய மாணவர் ஓட்டம்
Next articleபாரீஸ் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்! வெளிநாட்டவர்கள் வாழும் பகுதியில் அதிக இராணுவம் குவிப்பு