ஏப்ரல் 05இல் அரசியலமைப்புப் பேரவையின் முதல் கூட்டம்

parliament-1புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் வரும் ஏப்ரல் 05 ஆம் நாள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில், நாடாளுமன்ற சபா மண்டபத்திலேயே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக, அரசியலமைப்பு பேரவை ஏழு பிரதித் தலைவர்களை அரசியலமைப்பு பேரவை நியமிக்கவுள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது, சபையில் குறைந்தபட்சம் 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும் வரையறுக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், நீதியமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய 17இற்கும் குறையாத உறுப்பினர்களைக் கொண்ட செயற்பாட்டுக் குழுவும் அமைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறாத நாட்களில் அரசியலமைப்பு பேரவைக் கூட்டங்கள் இடம்பெறும். இந்த அமர்வில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளொன்றுக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

Previous articleபசில் ராஜபக்சவின் மைத்துனர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது
Next articleயாழில் காதலிகள் தற்கொலை முயற்சி… காதலன் பொலிஸில் சரண்.!