யாழில் காதலிகள் தற்கொலை முயற்சி… காதலன் பொலிஸில் சரண்.!

love5யாழ். சாவ­கச்­சேரி நகர் பகு­தியில் அழ­கு­சா­தனப் பொருள் விற்­பனை நிலை­யத்தில் பணி­பு­ரியும் இளை­ஞ­ரொ­ருவர் இரு­வேறு பாட­சா­லை­களில் கல்வி கற்கும் 2 மாண­வி­களை காத­லித்­ததன் விளை­வாக அவர்கள் இரு­வரும் தற்­கொ­லைக்கு முயற்­சித்து ஆபத்­தான நிலையில் சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச் சம்­பவம் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் குறித்த சம்­ப­வத்தை அறிந்த குறித்த இளைஞன் உட­ன­டி­யா­கவே சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­துள்ளார்.

குறித்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தி­லுள்ள இரு­வேறு பாட­சா­லை­களில் கல்வி பயின்று வரும் 16 வயது மற்றும் 17 வய­து­டைய மாண­விகள் இரு­வரை குறித்த இளைஞன் காத­லித்து வந்­துள்­ளார். இந்த விடயம் குறித்த மாண­வி­களின் வீட்­டா­ருக்கு தெரி­ய­வந்­துள்ள நிலையில் ஒரு மாணவி தூக்க மாத்­தி­ரை­களை உட்­கொண்டு தற்­கொ­லைக்கு முயன்­றுள்ளார்.

அதே­போன்று மற்­றைய மாண­வியும் தூக்­க­மாத்­தி­ரையை உட்­கொண்டு வீட்டுக் கிணற்றில் பாய்ந்து தற்­கொ­லைக்கு முயன்­றுள்ளார்.

இந்­நி­லையில் குறித்த 2 மாண­வி­களும் ஆபத்­தான நிலையில் உற­வி­னர்­களால் மீட்­கப்­பட்டு நேற்று முன்­தினம் இரவு சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

குறித்த சம்­ப­வத்­தினை அறிந்த இளைஞன் உட­ன­டி­யா­கவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஏப்ரல் 05இல் அரசியலமைப்புப் பேரவையின் முதல் கூட்டம்
Next articleஓடுபாதையை விரிவாக்காமல் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையம்