கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

colombo-1பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை அடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய விமானப்படை, இராணுவம், சிவில் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது ஐ.பி.சி தமிழ் விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் வெளிவரும், உட்செல்லும் பயணிகள் அதிகளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பிரசல்ஸ் விமான நிலையத்தில் ஐ.எஸ் ஆயுததாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 34 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, விமான நிலைய தொலைபேசி அழைப்புக்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.

Previous articleஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு
Next articleஇதில் விஷாலை மிஞ்ச யாரும் இல்லை