இதில் விஷாலை மிஞ்ச யாரும் இல்லை

001விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதில் ஒன்று மற்றவர்களுக்கு உதவி செய்வது.தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக இருப்பவர் எம்.ஆர். குகன். இவரது மனைவி சூர்யபிரபாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாகவும், தினமும் ரூ.17 ஆயிரம் செலவில் 6 ஊசி மருந்துகளை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த தகவல் விஷாலிடம் செல்ல, நேரடியாக மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரமாக இருக்கும் மருத்துவ செலவை கொஞ்சம் குறைக்குமாறு கேட்டிருக்கிறார். பின் குறைக்கட்ட மருத்துவ கட்டணத்தை ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் தொகைக்கான காசோலையை விஷால் தனது அறக்கட்டளை மூலம் ஆஸ்பத்திரிக்கு செலுத்தி சிகிச்சை தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்துள்ளார்.

Previous articleகட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Next articleஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டி எனது கடைசி ஆட்டம்: மைதானத்தில் கண்கலங்கிய அப்ரிடி