இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 50 பேருக்கு எச்.ஐ.வி

hivஸ்ரீலங்காவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 50 பேர் இந்த வருடம் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சுமார் 20 பேர் வரை எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் வரை ஆயிரத்து 309 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதாகவும் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில், தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்தவர் சிசிர லியனகே கூறியுள்ளார்.

இதேவேளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதால் பிறந்த குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுடன் பிறக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மாத்திரம் 15 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டதாகவும் வைத்தியர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் பேஸ்புக்கில் நகைகள் திருட்டு
Next articleபாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தை ஆன டாக்டர்: 100 குழந்தைகள் பெறுவதே லட்சியம்