பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தை ஆன டாக்டர்: 100 குழந்தைகள் பெறுவதே லட்சியம்

hhh-1பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது (45). டாக்டராக இருக்கிறார்.

இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் உள்ளனர்.

இவருக்கு கடந்த வாரம் தான் 2–வது மற்றும் 3–வது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.

இவ்வளவு பெரிய குடும்பத்தை சிரமமின்றி நிர்வகிப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘சமீபத்தில் எனது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதனால் தற்போது எனது குழந்தைகள் எண்ணிக்கை 35 ஆகிவிட்டது.

இதனால் மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு 4–வது திருமணம் நடந்தால் 100 குழந்தைகளை பெற வேண்டும். அதுவே எனது ஆசையும், லட்சியமும் ஆகும்.

எனது 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பராமரிக்க மாதம் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. நான் தரமான டாக்டராக இருக்கிறேன். சிறிய அளவில் வியாபாரமும் செய்கிறேன். அதன் மூலம் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியகிறது’ என்றார்.

Previous articleஇலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 50 பேருக்கு எச்.ஐ.வி
Next articleபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு