பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

Unbenannt-1முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தை ஆன டாக்டர்: 100 குழந்தைகள் பெறுவதே லட்சியம்
Next articleமன்னாரில் அதிகரிக்கும் பொலிஸ் நிலையங்கள்!