மன்னாரில் அதிகரிக்கும் பொலிஸ் நிலையங்கள்!

mannapolisstastion_005நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 600 வரையில் மேலதிகமாக உருவாக்கும் தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் இன்று காலை வங்காலை பொலிஸ் நிலையம்’ வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 600 வரையில் மேலதிகமாக உருவாக்கும் தீர்மானத்திற்கு ஏற்ப மன்னார் வங்காலை கிராமத்தில் புதிய பொலிஸ் நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவினால் இன்று காலை குறித்த பொலிஸ் நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு சர்வமதத்தலைவர்கள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், நானாட்டான் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ, மற்றும் வைத்தியர்கள், உயர் அதிகாரிகள் என பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Previous articleபிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
Next articleமீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும்!- மின்சக்தி அமைச்சர்