வலி வடக்கை மறந்த கூகிள் வீதிக் காட்சி (google street view): உருகும் மக்கள்

vali_googlesteet_001கூகிள் வீதி பார்வையூடாக (google street view) தற்பொழுது இலங்கையில் அனைத்து பிரதேசங்களையும் மிகவும் துல்லியமாக பார்வையிட முடிகின்றது.
ஆனால் கூகிள் வீதி பார்வையூடாக (google street view) யாழ். வலி, வடக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திற்கு உட்பட்ட பிரதேசத்தினை பார்வையிட முடியாதவாறு உள்ளது.

வலி.வடக்கில் இருந்து கடந்த 30 வருடகாலமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த முறையின் ஊடாக கூட தமது சொந்த இடங்களை பார்வையிட முடியவில்லை என கவலை கொண்டுள்ளனர்.

இதேவேளை கூகிள் வீதி பார்வையூடாக உயர் பாதுகாப்பு வலய எல்லைகள் வரை மாத்திரமே சென்று பார்வையிட கூடியவாறு உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)
http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights

Previous articleயாழ். பல்கலை. ஆடைகள் கட்டுப்பாடு தொடர்பில் மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு.
Next articleபலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக மக்களின் காணி சுவீகரிக்கப்படமாட்டாது: இந்தியா