பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக மக்களின் காணி சுவீகரிக்கப்படமாட்டாது: இந்தியா

Palaleயாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் போது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது என இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜன் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தின் ஓடு தளத்தை பெரிதாக்காது, விமான நிலையத்தை அபிவிருத்திச் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் கடந்த 15 ஆம் திகதி இலங்கைக்கு சென்ற சென்னை விமான நிலைய பணிப்பாளர் தீபக் சாஸ்திரி உட்பட 5 உறுப்பினர்கள் அடங்கிய குழு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் போது தொழிற்நுட்ப ரீதியாக உதவுவதாக உறுதியளித்துள்ளனர் எனவும் நடராஜன் கூறியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அரசாங்கம், பிரதேச மக்களின் காணிகளை சுவீகரித்தது.

அதியுயர் பாதுகாப்பு வலயமாக இந்த காணிகளை அரசாங்கம் தன்வசம் வைத்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற போவதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் போது, மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது அவர் மக்களிடம் இதனை கூறியிருந்தார்.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கு வட மாகாணத்தை சேர்ந்த பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தார்.

Previous articleவலி வடக்கை மறந்த கூகிள் வீதிக் காட்சி (google street view): உருகும் மக்கள்
Next article2.0 பட புகைப்படங்கள் லீக் – அதிர்ச்சியில் படக்குழுவினர்