2.0 பட புகைப்படங்கள் லீக் – அதிர்ச்சியில் படக்குழுவினர்

2_0_leak001ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார்.சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டில்லியில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் அக்ஷய் குமார் பங்கேற்க நடந்து வருகிறது.வித்தியாசமான தோற்றத்தில் உள்ள அக்ஷய் குமாரின் சில புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்புக்குள் யாரும் செல்போன் எடுத்துவர அனுமதி இல்லாத நிலையில், புகைப்படம் எப்படி வெளியானது என்ற பெரிய குழப்பத்தில் படக்குழுவினர் உள்ளனர்.இதேபோல் ரஜினியின் கபாலி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Previous articleபலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக மக்களின் காணி சுவீகரிக்கப்படமாட்டாது: இந்தியா
Next articleவித்தியா படுகொலையில் அரசதரப்பு சாட்சியில் குழப்பம்..? குடும்பம் மனிதஉரிமை ஆணையகத்தில்…!