யாழ்ப்பாணத்தில் சினிமாவில் இடம் பெறும் சம்பவங்கள் போல் நிஜத்திலும் இடம்பெற்று வருகின்றது. உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள 25 வயதான இளைஞன் ஒருவர் மானிப்பாய்ப் பகுதியில் உள்ள யுவதியை 7 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். குறித்த இளைஞனின் சகோதரி மானிப்பாயில் வசிப்பதாகவும் அங்கு சென்று வரும் போதே யுவதியைச் சந்தித்து காதல் மலர்ந்ததாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு 7 வருடங்கள் காதலித்த யுவதியை இளைஞன் திருமணம் முடிக்க நாள் கேட்ட போது அதனை மறுத்த யுவதி ‘உங்களுடன் நான் நட்பாகப் பழகினேனே தவிர காதலிக்கவில்லை‘ எனத் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த இளைஞன் நஞ்சருந்திய நிலையில் மந்திகை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
யுவதியின் சகோதரர்கள் இரண்டு பேர் ஐரோப்பாவில் வசிப்பதாகவும் அவர்கள் அங்கு யுவதிக்கு திருமணம் நிச்சயித்திருப்பதாக சந்தேகிப்பதாகவும் இளைஞனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.