வவுனியாவில் இராணுவத்தினருக்கு வீடு

vauneja-600x449 (1)வவுனியா கொக்எலிய பகுதியில் இராணுவத்தினருக்கு நிர்மணிக்கப்பட்டு வரும் நல்லிணக்க படைவீரர் கிராமத்திற்கு வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு முன்னால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் குறித்த வீட்டுத் திட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரின் ஒத்துழைப்புடன் 40 பேர்ச்சர்ஸ் வீதம் 80 காணி துண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 51 வீடுகளையும் உத்தியோகபூர்வமாக படைவீரர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் 4 ஆவது பொறியியல் சேவை ரெஜிமன்ட்டினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த வீட்டுத் திட்டத்திற்காக தேவையான நிதி நமக்காக நாம் வீடமைப்பு நிதியம் மற்றும் அரசாங்க நிதியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அமைய முப்படையினரின் பங்களிப்புடன் அந்த வீடு முழுமையாக கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றின் முழுமையான பெறுமதி 2 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் இராணுவ வீட்டில் ஒரு வீடு வித்தியா குடும்பத்துக்கும்
Next articleலஞ்சம் வாங்கிய பொலிசாரை காட்டிக் கொடுத்த கூகுள் வீதி பார்வை (Street View)