தாய்லாந்தில் கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளையில் பெண் ஒருவர், தன் 6 மாத மகனுக்கு தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
தாய்ப்பாசத்தை மிஞ்சிய விசயம் ஏதும் உலகத்தில் இல்லை. அதனை உறுதி செய்வது போல், தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கை மற்றும் கால் உடைந்த நிலையில், தலையிலும் பலத்த காயத்தோடு மார்பில் ரத்தக்கறையோடு கட்டிலில் சிகிச்சைக்காக ஒரு பெண் படுத்துள்ளார். அந்த வேளையிலும், தன் காயங்களைப் பொருட்படுத்தாது, தன் ஆறு மாத மகனின் பசியை தாய்ப்பால் கொடுத்து ஆற்றுகிறார் அப்பெண்.