முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? ” CV” விளக்கம்

vigneswaranஹிக்கடுவையில் நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டை, அரசியல் காரணங்களுக்காக தாம் புறக்கணிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் அவர், முதலமைச்சர்களின் 32ஆவது மாநாட்டில் தாம் பங்கேற்காததற்கான காரணத்தை அவர் வெளியிட்டார்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினாலேயே, முதலமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்க முடியாது போனதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காகவே இந்த மாநாட்டைப் புறக்கணித்தார் என்று வெளியான செய்திகள் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, முதலமைச்சர்களின் மாநாடு நடந்த போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முதலமைச்சர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததாக யாழ். ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபாடசாலை உணவகத்தில் ரொபி, றோல்ஸ், நூடில்ஸ், சுவிங்கம், சொக்லட் விற்கத் தடை
Next articleகொழும்பில் வரலாற்று காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும் என்ற அச்சம்