வெற்றி பெறுவதற்கு முன்பே கொண்டாட்டமா? வங்கதேச வீரர்களை கிண்டலடித்த ரெய்னா

0717b6c7-8537-4575-a02f-0c1b313d0955_S_secvpfஇந்திய துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா வங்கதேச வீரர்களை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதிய உலகக்கிண்ண டி20 போட்டி நேற்று பெங்களூரில் நடைபெற்றது.

இதில் கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது பாண்டியா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் வங்கதேச வீரர் மக்முதுல்லா ஒரு ஓட்டம் எடுத்தார்.

2வது பந்தை முஷ்பிகுர் ரஹிம் பவுண்டரிக்கு விளாசினார். அதேபோல் 4வது பந்தையும் அவர் பவுண்டரிக்கு விளாசி போட்டியில் வெற்றி பெற்றதைப் போல் கொண்டாடினார்.

ஆனால் 3 பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, முஷிபிகுர் ரஹிம் (11), மக்முதுல்லா (18), முஸ்டபிஜூர் ரஹ்மான் (0) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழக்க இந்தியா 1 ஓட்டத்தால் வெற்றி பெற்றது.

இதனையடுத்து சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் வங்கதேச வீரர்களை மறைமுகமாக கலாய்த்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

“கடைசி வரை போராட்டத்தை விட்டுவிடவும் கூடாது, வெற்றி பெறுவதற்கு முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபடவும் கூடாது. என்ன ஒரு அருமையான போட்டி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Don’t give up till the end Don’t celebrate before you win! #IndvsBan Wat a game ??✌️ pic.twitter.com/bej9uAk39W

— Suresh Raina (@ImRaina) March 23, 2016

Previous articleபிரஸெல்ஸ் தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: மவுனம் சாதிக்கும் முக்கிய தீவிரவாதி
Next articleகேரளா கஞ்சாவுடன் யாழ் இளைஞன் வவுனியாவில் கைது!