பிரசல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேரை பெல்ஜியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்கயார்பீக் மாவட்டத்தில் இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதேவேளை, பிரான்ஸிலும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.