மனைவியை அச்சுறுத்தி எதிர் வீட்டு யுவதியுடன் உறவைப் பேணிவந்து பின்னர் அவரை கர்ப்பவதியாக்கிய குடும்பஸ்தர் ஒருவர் பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அதேவேளை காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பளை கீரப்பன எனும் பிரதேசத்திலேயே மேற்படி சம்பவம் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய குடும்பஸ்தரே 18 வயதுடைய யுவதியை மயக்கமாத்திரை கொடுத்து கர்ப்பவதியாக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
37 வயதுடைய குறித்த நபர் எதிர் வீட்டில் குடியிருந்த 18 வயது யுவதியுடன் தகாத உறவைப்பேணி வந்தமையால் குறித்த யுவதி தற்பொழுது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரியவருகிறது.
மேற்படி நபர் தனது மனைவியை அச்சுறுத்தியே குறித்த யுவதியுடன் தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும் யுவதிக்கும் அந்நபருக்குமிடையே கடிதப் பரிமாற்றங்களும் இடம்பெற்று வந்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேற்படி யுவதி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் மேற்குறிப்பிட்ட நபருடனான முதல் சம்பவமானது அவரின் மனைவி தனக்கு அருந்த கொடுத்த பானத்தில் ஏதோ ஒரு வகை மயக்க மாத்திரையைக் கலந்து கொடுத்ததன் பின்னரே நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சிகிச்சை பெற்று வரும் நபரையும் அவரின் மனைவியையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்தனர்.