கிறித்துவர்களின் புனித வியாழன் மற்றும் வெள்ளி தினங்களை முன்னிட்ட நடைபெற்ற கத்தோலிக்க ஆராதனை கூட்டத்தில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் அகதிகளின் கால்களை கழுவி முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனித வியாழனான நேற்று இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு அருகில் உள்ள Castelnuovo di Porto என்ற அகதிகள் முகாமிற்கு போப் பிரான்சிஸ் விஜயம் செய்துள்ளார்.
இந்த முகாமில் 892 அகதிகள் தங்கியுள்ள நிலையில், இவர்களுடன் இணைந்து கூட்டப்பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் ஈடுபட்டுள்ளார்.
புனித வியாழனான நேற்றிய தினத்தில் தான் ஏசுநாதர் தனது தோழர்களின் கால்களை புனித எண்ணெய்யால் கழுவி, பாதங்களுக்கு முத்தமிட்டார்.
இதனை போப் பிரான்சிஸ் செய்து அகதிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளார்.
ஆராதனை கூட்டத்தில் பங்கேற்ற அகதிகளின் பாதங்களை புனித எண்ணெய்யால் கழுவி விட்டு ஒவ்வொருவரின் கால்களையும் முத்தமிட்டு ஆராதனை செய்துள்ளார்.
அப்போது போப் பிரான்சிஸ் பேசியபோது, ‘நம் அனைவருக்கும் வெவ்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் இருந்தாலும், நாம் அனைவரும் சகோதரர்கள்.
ஒவ்வொருவருக்கும் இடையில் அன்பை போதிப்பதால் மட்டுமே இவ்வுலகில் அமைதியை நிலைப்படுத்த முடியும்’ என போப் பிரான்சிஸ் உருக்கமாக பேசியுள்ளார்.