மைத்திரிக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தங்களா….?

president visit jaf 78dஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு யாழ்ப்பாணத்தில் உறவுகள் இருக்கின்றார்களா என ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே தேரர் இவ்வாறு கேட்டுள்ளார்.

மைத்திரி தமிழ் உறவுகளைப் பார்க்க மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதுடன் தமிழ் மக்கள் மீது நல்லாட்சி அரசாங்கம விஷேட கவனம் செலுத்தி வருவதாகவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

வடக்கின் தமிழ் உறவுகளை சந்திக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதம் ஒருமுறையேனும் யாழ்ப்பாணம் செல்கின்றார். வடக்கின் தமிழ் மக்களை ஜனாதிபதி தான் சென்று பார்க்க வேண்டும் என்ற கட்டாய தேவை எதுவுமே இல்லை.

ஏனெனில் வடக்கின் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கின்றனர்.

மேலும் தமிழ் மக்கள் கேட்காத உதவிகளையும் வடக்கிற்கு சென்று செய்து கொடுக்கின்றமை வேடிக்கையானது’ என்றும் தேரர் கூறினார்.

Previous articleகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா விமானப்படை சிறப்பு பாதுகாப்பு
Next articleகவர்ச்சி நடிகையிடம் அறை வாங்கிய நிருபர்…!