பொலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனிடம், ஏடாகூடமாக கேள்வி கேட்டு ஒரு நிருபர் அறை வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடெங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன்பொருட்டு, குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து நடனாமாடுவதற்காக சன்னி லியோனுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.
இதனால் சன்னிலியோன் நேற்று தனது கணவர் டேனியல் வெப்பருடன் குஜராத் சென்றார். அங்கு, அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்ற சன்னிலியோனிடம் ஒரு பத்திரிக்கையாளர் பேச்சு கொடுத்துள்ளார்.
அந்த பத்திரிக்கையாளர் சன்னியிடம் “இதற்கு முன் ஆபாச நடிகையாக இருந்தீர்கள். இப்போது பாலிவுட் நடிகையாக இருக்கிறீர்கள். தற்போது எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார்”. அதைக் கேட்டு கோபம் அடைந்த சன்னிலியோன் அவரிடம் “மீண்டும் ஒரு முறை அந்த கேள்வியை கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.
மீண்டும் அந்த நிருபர் “இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு வாங்குகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டுள்ளார். இதனால் வெகுண்டெழுந்த சன்னிலியோன் பளார் என்று அந்த நிருபர் கன்னத்தில் அறை விட்டுள்ளார்.
அதன்பின் ஹோலி நிகழ்ச்சியில் கலந்து சன்னிலியோன் கலந்து கொண்டார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் வெளியேற வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறிவிட்டனர். அதன்பின் 15 நிமிடம் மட்டும் நடனமாடி சன்னிலியோன் இரசிகர்களை குஷிபடுத்தினார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த சன்னிலியோன் கணவர் “அந்த நிருபர் நடந்து கொண்ட விதத்திற்கு, சன்னி தக்க பதிலடி கொடுத்துவிட்டார். எனவே, பொலிஸாரிடம் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கல்லூரி மாணவர்கள். எனவே அவர்களின் வருங்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைக்கிறோம். ஆனால், இனிமேல் குஜராத் வருவதற்கு சன்னிலியோன் 1000 முறை யோசிப்பார்” என்று கூறினார்.