உலகின் பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளின் நிலைத் தலைவராக கணிக்கப்பட்ட அப்த் அர் – ரஹ்மான் முஸ்தபா அல் – காதுலி அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
அப்த் அர் – ரஹ்மான் முஸ்தபா அல் – காதுலி என்ற இந்த நபரின் உயிருக்கு அமெரிக்கா 7 மில்லியன் டொலர் விலை விதிக்கப்பட்டிருந்து.
குறித்த நபரின் பெயர் ஹாஜி இமாம் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டர் கார்டர் தெரிவித்திருக்கிறார்.
உயிரிழந்த தீவிரவாதியின் உண்மைப் பெயர் அப்த் அர் – ரஹ்மான் முஸ்தஃபா அல் – காதுலி என கூறப்பட்டுள்ளதுடன் எப்படி, எங்கே அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஐ எஸ்ஸின் அமைச்சரவை என்று சொல்லப்படும் அமைப்பை தாங்கள் தொடர்சியாக அழித்துவருவதாக கார்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒமர் அல் – ஷிஷானி என்று அழைக்கப்பட்ட ஐஎஸ் குழுவின் யுத்த அமைச்சரை தாங்கள் கொன்றுவிட்டதாக கடந்த மாதம் பெண்டகன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.