மொடல் அழகியை விடாமல் துரத்தும் பாண்ட்யா

pandya_gf_001இந்திய கிரிக்கெட் அணியின் ’சூப்பர் ஹீரோ’வாக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா.
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது.

அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொல்கத்தாவை சேர்ந்த 21 வயதான மொடல் அழகி லிஷா சர்மாவை துரத்தி வருகிறார்.

நேரம் கிடைக்கும் போது இவர்கள் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வருகின்றனராம். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை லிஷா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

லிஷா சர்மா கூறுகையில், “வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசும் போது கூட அவர் புன்னகை செய்தார். அந்த நெருக்கடியான நேரத்திலும் எப்படி சிரிக்க முடிகிறது என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு நெடிக்கடியாக உணர்ந்தால் பதற்றம் தான் அதிகரிக்கும் என்று கூலாக கூறினார். அவரது அமைதி தான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

Previous articleவியர்வையை தடுப்பதற்கான வழிகள்!
Next articleமுல்லைத்தீவில் சமநேரத்தில் முக்கிய மூன்று விடயங்களும்: மக்கள் குழப்பம்