கண்ணீர் விட்டழுத முன்னாள் பிரதமர்

dmஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரட்ன ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பகிரங்கமாக கண்ணீர் விட்டு அழுத அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

தான் இன்னும் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கப் போவதில்லை என்று கூறிய அவர், எனினும் கட்சியின் மீதுள்ள அன்பில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதன் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்பதாகவும், கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு எவருக்கும் இடமளிப்பதில்லை என்றும் கூறினார்.

தான் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாகவும் அவர் கூறினார்.

Previous articleஎதிரணிக்கு அழிவை உண்டாக்கும் ஹேரத்: சுழல் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை
Next articleகொழும்பு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை