பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸை துளியும் மதிக்காத ஸ்டீவ் ஸ்மித்! வைரலான ஷாட் (வீடியோ இணைப்பு)

smith_shot_001பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அடித்த ஒரு ’ஷாட்’ தான் இப்போது வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டம் நேற்று மொஹாலியில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அணித்தலைவர் ஸ்மித், மேக்ஸ்வெல் (30), வாட்சன் (44) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ஓட்டங்கள் எடுத்தது.

ஆனால் பின்னர் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால் தோற்றது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணித்தலைவர் ஸ்மித் 61 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துளியும் மதிக்காமல் வித்தியாசமான ஷாட்டுகளால் பவுண்டரிகளை விளாசினார்.

இதில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸின் பந்தை ஸ்டெம்பிக்கு பின்னால் சென்று பவுண்டரி விளாசினார் ஸ்மித். இந்த ’ஷாட்’ தான் தற்போது வைரலாகியுள்ளது.

Previous articleதென் கொரியாவை எரித்து சாம்பலாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை
Next articleகனடாவில் காணாமல் போன 2 வயது மகன்: கண்ணீருடன் உதவி கோரிய பெற்றோர்