வவுனியாவில் தமிழ் பெண்களை மணந்த இராணுவத்திற்கே வீடாம்!

housing-armeவவுனியா கொக்குவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத்திற்கான 51 வீடுகளை கொண்ட நல்லிணக்க படைவீரர் கிராமத்திலுள்ள வீடுகளில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கும், தமிழ் பெண்களை திருமணம் முடித்த இராணுவத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 56வது படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டம் நல்லிணக்கம் மற்றும் சக வாழ்வை அடிப்படையாக கொண்டதென பாதுகாப்பு அமைச்சின் செயலர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி நல்லிணக்க படை வீரர் கிராமம் நாற்பது பேர்ச் வீதம் எண்பது காணித்துண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐம்பத்தியொரு வீடுகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு, இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கும், தமிழ் பெண் களை திருமணம் முடித்த இராணு வத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் அறிவித்துள்ளார்.

முற்று முழுதாக இராணுவ நோக்குடன் கட்டப்படும் இந்த வீட்டு திட்டத்தில் வீடு ஒன்று இரண்டு மில்லயன் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றது.

இது தவிர இங்கு மைதானம் மற்றும் பூங்கா ஆகிய அமைப்பதற்கான நடவடிக்கைகளும் இடம் பெற்றுவருகின்றது.

Previous articleகனடாவில் காணாமல் போன 2 வயது மகன்: கண்ணீருடன் உதவி கோரிய பெற்றோர்
Next articleகிழக்கில் மீண்டும் சிங்களக் குடியேற்றத்திற்கு தயாராகும் சரத் பொன்சேகா