முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரின் அணிவகுப்பு

maveerar_army_001இறுதிக்கட்டபோரின் பின் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லமும் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த துயிலுமில்ல வளாகத்தில் தினமும் இராணுவத்தினர் காலையில் இராணுவ அணிவகுப்பு செய்கின்றனர்.

மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் இவற்றை தினமும் பார்த்து மனவேதனை அடைவதை அவதானிக்க முடிகின்றது. உலவியல் ரீதியாக அவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இராணுவத்தினரின் இச்செயற்பாடு மக்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி பார்க்கும் நிலையாகவே அமைந்துள்ளது.

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது என்று புத்தபெருமான் கூறியுள்ளபோதும், குறித்த துயிலுமில்லத்தை உடைத்து அழித்து கல்லறை நடுவே புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமட்டு செட்டிபாளைய கடற்கரையில் நடக்கும் அவலம்
Next articleபாகுபலியால் தான் கபாலியே விற்றதா? வெளிவந்த உண்மை தகவல்