79 வயது மூதாட்டி 24 வயது இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகம்

padeமாத்தறைப் பிரதேசத்தில் 79 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக 24 வயது இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த சந்தேகநபர் இவ்வாறு துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் ரத்மலான விமானப்படைத்தள முகாமில் சேவை புரியும் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Previous articleநீரில் மூழ்கிய தந்தையை செயற்கை சுவாசம் வழங்கி காப்பாற்ற முயற்சித்த மகன்
Next articleகாலநிலையில் திடீர் மாற்றம்! நாட்டின் நாளா பகுதியிலும் எதிர்பாராத மாற்றம்