நாயால் வந்த வினை: தாய்க்கு வந்த நிலை

odoமட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் – தும்பங்கேணி பிரதான வீதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 4 மாத கைக் குழந்தையின் தாயினது கால் முறிவடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழுகாமத்தைச் சேர்ந்த நந்தினி தேவராஜன் (வயது – 26) என்ற தாய், தனது கைக்குழந்தையுடன் பழுகாமத்திலிருந்து திக்கோடை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தும்பங்கேணி எனுமிடத்தில் வீதிக்குக் குறுக்கே பெரிய நாயொன்று திடீரெனப் பாய்ந்ததால் முச்சக்கர வண்டி குடை சாய்ந்தது.

இதனால் குறித்த தாயின் கால் முறிவடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஅனைத்து பாடசாலைகளையும் 12.00 மணியுடன் விட கோரிக்கை!
Next articleநயன்தாரா இனிமேல் நடிக்க மாட்டாராம்!