டோனியிடம் வாயைக் கொடுத்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்ட நிருபர்

dhoni_press_001 (1)இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை நிருபர்கள் தேவையற்ற கேள்விகளை கேட்டு தொடர்ந்து கோபப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டோனியிடம் ஒரு நிருபர், “ஓட்ட விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. இது போன்ற ஒரு வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?” என்று கேட்டுள்ளார்.

இதற்கு டோனி, “நீங்கள் பேசுவதை பார்த்தால் இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பது தெரிகிறது” என்று கோபமாக பதிலளித்தார்.

தற்போதும் இதே போன்று ஒரு நிருபர் டோனியிடம் வாயைக் கொடுத்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பயிற்சியை முடித்து கொண்டு வந்த டோனியிடம் ஒரு நிருபர், “நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டுள்ளார். அந்த நிருபரின் கேள்வியால் மற்ற நிருபர்கள் சிறிது நேரத்துக்கு வாயை திறக்கவில்லை.

அப்போது டோனி, “உங்களால் முடிந்தால் நீங்கள் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள். நாங்கள் உங்களது வேலையை பார்க்கிறோம்” என்று கூறி அவர் வாயை அடைத்தார்.

Previous articleசம்பூர் அனல் மின் நிலையம்! இந்தியாவுடன் பேசுவேன்! இரா.சம்பந்தன்
Next articleகுடும்பத்தினருடன் Fogo தீவிற்கு சென்ற கனடிய பிரதமர்! ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)