நாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசையில் கோட்டா!

gota0101மக்களின் விருப்பத்துடனேயே நாடாளுமன்றம் செல்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அண்மையில் சில தகவல்கள் பரவியவண்ணமுள்ளன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தெலிஜ்ஜவில சமரசிங்காராமய அறநெறி பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட கோட்டாவிடம் இதுதொடர்பில் வினவப்பட்டபோதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்லவேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் கோட்டா இதன்போது குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகள் தொடர்பில் கோட்டாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் நடவடிக்கைள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபடையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி மகேஸ்
Next articleவடக்கில் உருக்கு வீடுகள் அமைக்கும் உடன்பாட்டை இறுதி செய்ய வருகின்றனர் மிட்டலின் பிரதிநிதிகள்