மஹாரகம பிரதேசத்தில் உள்ள பிரபலமான நடன நிறுவனமொன்றில் மன நோயினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குலசிறி புதுவத்த என்ற நடன ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் குடிபோதையில் இருந்தபோது சிறுமியின் தலை, வயிறு மற்றும் கால்களிலும் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்து 6 நாட்கள் வரை அவர் கைது செய்யப்படவில்லை. ஆறு நாட்களுக்கு பின்னர் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.