லண்டன் முழுவதையும் புரட்டி எடுத்த சூறாவழி…! வெளியே செல்வது ஆபத்து! அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அதிக காற்றழுத்தம் நிலவி வருவதன் காரணமாக தரையிரங்கும் விமானங்கள் திருப்பிடவிடப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், சில முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

* பிரித்தானியாவில் 100mph வேகத்திற்கு பலத்த காற்று வீசுவதால், Gatwick விமான நிலையத்தில் தரையிரங்க வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

* South West, Isle of Portland, Berry Head and Thorney Island ஆகிய பகுதிகளில் 70mph வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* குறிப்பாக, இங்கிலாந்தின் Hampshire , Sussex, Surrey, மற்றும் Kent போன்ற நகரங்களில் மோசமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* பலத்த காற்று காரணமாக, இங்கிலாந்தின் Dartford ஆற்றை கடக்கும் பாதை மற்றும் M48 Severn பாலத்தின் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

* சாலைகளை கடக்கும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும், மேலும் உங்கள் பயணத்தின் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை கவனத்தில் கொள்க.

* பிரித்தானியாவின் வட கிழக்கு பகுதியில் இருந்து பலத்த மழை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியினை நோக்கி நகர வாய்ப்புள்ளது, மேலும், பலத்த காற்று காரணமாக மரங்களின் கிளைகள் உடைந்து விழுவதற்கு வாய்ப்புள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்லவும்.

* முக்கியமாக, இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரை மற்றும் தெற்கு கடற்கரையில் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
Inland – இல் 60mph வேகத்திற்கு காற்று வீசுகிறது, ஆனால் இதன் வேகம் 70mph ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற பகுதிகள் கேட்டி புயலில் இருந்து தப்பித்துவிட்டதால், இங்கு குறைவான காற்றழுத்தமே நிலவி வருகிறது.ukuk1uk2uk3uk4uk5uk6uk7

Previous articleகிறிஸ்தவ பாதிரியார் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிலுவையில் அறைந்து கொலை? தீயாய் பரவும் செய்தி
Next articleமுல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் இன்று நடந்த அற்பும்