கொஸ்கொடவில் பொலிஸ் அதிகாரியின் மர்ம உறுப்பை கடித்த நபர்கள்

polices11பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொஸ்கொட, துவேமோதரவில் பொது இடத்தில் இருவர் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். இதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களை கண்டித்துள்ளார்.

இதனையடுத்தே மதுபோதையில் இருந்த இருவரும் சேர்ந்து, பொலிஸ் உத்தியோகஸ்தரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இதனால் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleமனைவியின் மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு சிறை
Next articleகாதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை