கிரான்ட்பாஸ் – ஸ்டேஸ்புர பகுதியில் ஹெரோயினை தம் வசம் வைத்திருந்த பெண்ணொருவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் கிரான்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்தோடு, அவரிடம் இருந்து 18 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார்.