சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் லசித் மாலிங்கவை இழந்தமை முழு அணிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யது என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான உலக இருபது 20 சுப்பர் 10 குழு ஏ லீக் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது மெத்யூஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் பெரு வீழ்ச்சியிலிருந்து மீண்டு போராடி தோல்வியுற்றமை குறித்து கேட்ட போது,
”இங்கிலாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி நாங்கள் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் சரிந்திருந்தன.
அவ்வாறான சூழ்நிலையிலும் இங்கிலாந்திடம் வெறுமனே சரணடைய விரும்பவில்லை. மாறாக நானும் கப்புகெதரவும் எதிர்த்தாடத் தீர்மானித்தோம்.
பந்துவீச்சாளர்களை சிலரை இலக்கு வைத்து நாங்கள் இருவரும் துடுப் பெடுத்தாடினோம். அதன் பின்னரும் நாங் கள் எமது முயற்சியைக் கைவிடவில்லை.
திசர பெரேரா, தசுன் ஷானக்க ஆகியோரும் திறம்பட துடுப்பெடுத்தாடினர். ஆனால், போட்டியின் கடைசிக் கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் எடுத்த இரண்டு பிடிகள் ஆட்டத்தின் தன்மையை மாற்றியது.
”அந்த சந்தர்ப்பத்தில் நான் உபாதைக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தேன்.
என்னுடன் இன்னுமொரு சிறந்த துடுப்பாட்ட வீரர் இருந்திருந்தால் ஒற்றைகளை எடுத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பேன்.
இங்கிலாந்து வீரர்கள் மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கினர். அது எமக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதனைப் படிப்பினையாகக் கொண்டு சகல துறைகளிலும் நாம் முன்னேற வேண்டும்” என்றார்.
இலங்கை அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து கேட்டபோது,
”உண்மையில் எமது அணி அரை இறுதி யில் விளையாடுவதற்கு உகந்த வியூகங்களைக் கொண்டிருக்கவில்லை. அரை இறுதிக்கு போக முடியாமல் போனது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
தேசத்திற்கும் இரசிகர்களுக்கும் இழப்பை ஏற்படுத்திவிட்டோம். எனினும் எதிர்காலத்தில் சிறந்த அணியைக் கட்டி எழுப்புவதற்கான அதி சிறந்த 20 வீரர்களைத் தெரிவு செய்து அவர்களின் ஆற்றல்களின் பெறுமதியை நன்கு பரிசீலித்து சிறந்த அணி ஒன்றை கட்டி எழுப்புவதே சிறந்தது” என மெத்யூஸ் பதிலளித்தார்.