கிணறு வெட்டும்போது மண்ணிற்குள் புதைந்திருந்த மர்மப்பொருட்கள் வெளிவந்தன!

nallurநல்லூர்ப் பகுதியில் நேற்று மாலை இரண்டு மர்மப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது, என்றும் மேலுமொரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன் விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த மர்மப்பொருட்களை பாரப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபலாலி சர்வதேச விமானநிலைய முன்னெடுப்பு இந்திய அறிவுரையின் பிரகாரம் இடைநிறுத்தம்!
Next articleவெள்ளவத்தை விபச்சாரத்தில் 08 பேர் சிக்கினர்