Home உள்ளூர் செய்தி இராணுவத்தினரின் உதவியுடன் கட்டப்படும் கொக்கிளாய் விகாரையை ஆளுனர் பார்வையிடவில்லை..!

இராணுவத்தினரின் உதவியுடன் கட்டப்படும் கொக்கிளாய் விகாரையை ஆளுனர் பார்வையிடவில்லை..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் காணியை அபகரித்து பௌத்த மதகுரு ஒருவர் விகாரை ஒன்றை இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுகின்றார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விகாரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது தொடர்பாக நேரில் சென்று பார்வையிடுவதாகவும் ஆளுனர் ரெஜினோல்ட் கூரே  குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று நடந்த முக்கிய கலந்துரையாடலின் பின்னர் கொக்கிளாய் சென்று குறித்த விகாரை தொடர்பாக ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டது போல் அங்கு செல்லவில்லை.

கொக்கிளாய் விகாரை முன்வீதியில் காலையில் இருந்து காணி உரிமையாளர்கள் காத்திருந்த நிலையில் ஆளுனர் அங்கு செல்லவில்லை, இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதேவேளை, அவருக்கு வேலைப்பழு அதிகமாக இருந்திருக்கலாம், மறுபடியும் ஒருநாள் வந்து பார்வையிடுவார் என்று நம்புவதாக காணி உரிமையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.