Home சமூக சீர்கேடு தந்தையாலும் சகோதரனாலும் மகள் பாலியல்வல்லுறவு !

தந்தையாலும் சகோதரனாலும் மகள் பாலியல்வல்லுறவு !

download (2) திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தந்தையையும் மகனையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணறாஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள 10 வயது சிறுமி தனது தந்தை மது போதையில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் அதனையடுத்து 18 வயதான சகோதரர் தந்தையில்லாத நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் சிறுமியின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.