Home பல்சுவை வானில் இன்று நடக்க போகும் அரிய நிகழ்வு

வானில் இன்று நடக்க போகும் அரிய நிகழ்வு

Captureசூரியன் புதன் கோளை கடக்கும் அரிய நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை தான் புதன்கோள் சூரியனை கடந்து செல்லும்.

2006ம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது.

இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா,இந்தியா போன்ற நாடுகளில் காணலாம்.

இந்திய நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அடுத்து 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ம் திகதி, 2032-ம் ஆண்டு நவம்பர் 13-ம் திகதி தான் புதன்கோள் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும்.