அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தாரா கோட்டா? : நாளை விசாரணை

gota-3முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காகவே, கோட்டா அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான, அமெரிக்காவிலுள்ள வீட்டிற்கு விமானப்படை வீரர்களை பணிக்கமர்த்தியமை தொடர்பாகவும் வாக்குமூலம் பதிவுசெய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதேவேளை, நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.