Home யாழ் செய்தி சுன்னாகத்தில் மாணவி மாயம்!

சுன்னாகத்தில் மாணவி மாயம்!

downloadசுன்னாகத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட மூவரை தேடிவருவதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு காணமால் போயுள்ளதாக சுன்னாகம் காவல் நிலையத்தில் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை மேலதிக வகுப்புக்காக சென்ற மாணவி, இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் காவல்துறை உதவியை நாடியுள்ளனர்.

இதனிடையே தேடப்படும் குற்றச்செயல் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தர தொலைபேசி இலக்கங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது.