Home உள்ளூர் செய்தி வட்டுவாக்கலையைச் சேர்ந்த ச.சுகிர்தன் என்ற இளைஞன் வெள்ளைவானில் கடத்தல்…!

வட்டுவாக்கலையைச் சேர்ந்த ச.சுகிர்தன் என்ற இளைஞன் வெள்ளைவானில் கடத்தல்…!

13553280_1350739504955835_1315449728_nவட்டுவாக்கலையைச் சேர்ந்த ச.சுகிர்தன் என்ற இளைஞன் வெள்ளைவானில் இனம்தெரியாத நபர்களால் 15-04-2014 அன்று கடத்தப்பட்டுள்ளார். வெள்ளைவானில் வந்த சில சந்தேகநபர்கள் அவரின் தந்தையின் அலுவலகத்திற்கு முன்பாக திட்டமிட்டு கடத்தப்பட்டுள்ளார். இதனை நேரில் பார்த்த சிலர் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தந்தையிடம் கேட்டபோது சில நாட்கள் முன்பு இரண்டு இராணுவத்தினர் மற்றும் மூன்று C.I.D அதிகாரிகள் தனது மகனை பற்றி விசாரித்ததாகவும், அவரை தேடி வருவதாகவும் மிரட்டல் விடுத்து சென்றத்கவும், அதன் பின்னர் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகின்றது. இது பற்றி தாயாரிடம் கேட்டபோது, எனது மகனின் நிலைமை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. முதலில் கைது செய்ததாக சொன்ன காவல்துறை அதிகாரிகள் பின்னர் அவரை நாங்கள் கைதுசெய்யவில்லை என்று முன்னுக்குப்பின் முரணான கூறுகின்றனர் என்று தெரிவித்தார். தனது மகனை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு கதறி அழுதார். 11 சித்திரை 2014 கோபி என்ற விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டதும், அந்த நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வாறான பல்வேறு கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றது. ச.சுகிர்தன் கோபியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்றும், அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் என உதவி செய்தாரா என்று சில நாட்கள் முன்பு விசாரிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கடத்தல்கள் தொடருமாயின் நாட்டின் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்படும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். இவ்வாறான கடத்தல்கள் முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விண்ணப்பம் தெரிவித்துள்ளனர்.