நல்லைக் கந்தன் ஆலயத்தில் உங்கள் பொருட்களை தவறவிட்டுள்ளீர்களா?

nallur muruganநல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களை மாநகர சபையில் பெற்றுக்கொள்ள முடியும் என, யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்திற்கு வருகைதந்திருந்த பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உடமைகளை தவறவிட்ட பக்தர்கள் மாநகர சபையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தகுந்த ஆதாரங்களைக் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என, பொ. வாகீசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement