முல்லைத்தீவில் அக்காவின் மோட்டார் சைக்கிள்: ஓடிப்பார்த்த தம்பி விபத்தில் பலி!

muli-1முல்லைத்தீவில் புதிதாக வாங்கிய மோட்டார்சைக்கிளை செலுத்திப்பார்த்த 19 வயது வாலிபன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துணுக்காய்- கொத்தம்பியா குளத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. தேறாங்கண்டலை சேர்ந்த ஜெகநாதன் கோபிராஜ் (19) என்ற வாலிபனே உயிரிழந்துள்ளார்.

மூத்த சகோதரியால் புதிதாக வாங்கப்பட்ட மோட்டார்சைக்கிளை செலுத்திப்பார்த்த போது வேகப்பட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளார். வீதியினருகில் நடப்பட்டிருந்த இரண்டு மின்கம்பங்களில் மோதி, தலையில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

Advertisement