அமெரிகாவின் அதிபயங்கர ரகசியங்கள் தற்போது கசிந்தது: அணு குண்டை தாங்கிச் செல்லும் ஆளில்லா விமானம் கண்டு பிடிப்பு-

lrsb-nuke-bomber-drone-552313-620x356தற்போது உலகில் உள்ள பல வல்லரசு நாடுகளிடம் அணுகுண்டை ஏந்திச் சென்று தாக்கவல்ல விமானங்களும் ஏவுகணைகள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முதன் முறையாக அமெரிக்க பாதுகாப்பு பிரிவு ரகசியமாக ஆளில்லா விமானம் ஒன்றை தயாரித்து வருகிறது. மிக மிக ரகசியாமாக இது பாதுகாக்கப்பட்டு வந்தபோதும் நேற்றைய தினம் இது தொடர்பான செய்திகள் கசிந்துள்ளது. அணு ஆயுதத்தை ஏந்தியவண்ணம் தொலை தூரம் பறந்து சென்று இலக்கை தாக்க வல்ல ஆளில்லா விமானங்களை அமெரிக்கா தயாரித்துள்ளது. இதனூடாக பாதுகாப்பு நிலையில் அமெரிக்கா சற்று முன் நிலை வகிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் சென்று இந்த விமானங்கள் துல்லியமாக தாக்க வல்லவை.

தற்போது உள்ள நிலையில் திடீரென ஒரு நாட்டோடு போர் தொடுக்க நேர்ந்தால். அன் நாடு மீது அணு ஆயுதத்தை ஏவ ஏவுகணைகளை தான் பயன்படுத்தவேண்டும். ஆனால் இந்த ஏவுகணைகளை நடு வானில் வைத்து வெடிக்க வைக்க எதிரி நாடுகளிடம் ஆயுதங்கள் உள்ளது. இதனால் ஏற்படும் அழிவை அன் நாடு சற்று குறைத்துக் கொள்ளும். ஆனால் அமெரிக்கா தயாரித்துள்ள இந்தவையான ஆளில்லா விமானம் , ராடர் திரையில் அகப்படாது. மேலும் அதனை நோக்கி தாக்குதல் நடத்தினால் கூட அது அதனை சமாளித்துவிடும் திறன் கொண்டது. தன்னை தானே பாதுகாத்துக்கொள்ளும் திறன் மிக்க இந்த வகையான விமானத்தை தயாரித்து அதில் அணு ஆயுதத்தையும் பொருத்தி இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டவுள்ளது.

Advertisement